பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணை இயக்குனரும் பிரபல பாடலாசிரியர் விஷ்ணு இடவன் மீது சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் பரபரப்பு புகார்.

பாடலாசிரியர் விஷ்ணு இடவன் காவல் நிலையத்தில் ஆஜரானார். சென்னை நொளம்பூர் ஆண்டவர் நகர் ராமமூர்த்தி தெருவில் வசித்து வரும் பெண் வேளச்சேரியை சேர்ந்த பாடலாசிரியர் விஷ்ணு இடவன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். .பாடலாசிரியர் விஷ்ணு இடவன் தற்போது திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். கத்தி படத்திலும் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.மேலும் விக்ரம் திரைப்படத்தில் வரும் போர் கண்ட சிங்கம் என்ற பாடலையும்,நாயகன் மீண்டும் வரார் போன்ற பாடல்களை இவர் எழுதியது குறிப்பிடதக்கது.

புகாரில் விஷ்ணு இடவனை காதலித்து வந்ததாகவும், தாங்கள் இருவரும் வளசரவாக்கத்தில் உள்ள விஷ்ணு இடவன் வசித்து வந்த வீட்டில் அடிக்கடி உடலுறவு வைத்து கொண்டதாகவும் தெரிவுத்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் கர்ப்பம் ஆணாதாக கூறப்படுகிறது. அதனால் விஷ்ணு திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பேச்சு வார்த்தை செய்தபோது விஷ்ணு இடவன், அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்து பிரச்சினை செய்ததாகவும், இதனால் பெண் தரப்பினர் சென்னை திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிபடையில் பாடலாசிரியர் விஷ்ணுவிடம் விசாரணை நடைபெற்றது.

இந்த புகார் தொடர்பாக இன்று காவல் நிலையத்தில் ஆஜராகி தன் தரப்பு விளக்கத்தை விஷ்ணு இடவன் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இரு தரப்பிடமிடமும் விசாரனை நடந்து வருகிறது என போலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புகார் வளசரவாக்கம் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்றதால் வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது
மேலும் விஷ்ணு இடவன் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என டைரக்டர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகை நயன்தாராவின் வழக்கறிஞர்கள் தரப்பில் இருந்து காவல் துறையினருக்கு பல்வேறு நெருக்கடி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் பாடல் ஆசிரியர் விஷ்ணு இடவனுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
