எங்கள் DMK Women Power Engine முன் உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது என முதலமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளாா்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”மகளிருக்கு ரூ.5,000 வழங்கியதை கொச்சைப்படுத்தியவர்கள் தற்போது அதற்கு உரிமை கொண்டாடுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மகளிருக்கு ரூ.5000 வழங்க அதிமுகவின் அழுத்தமே காரணம் என எடப்பாடி அரிய கண்டுபிடிப்பை கூறியுள்ளாாா். தேர்தலை காரணம்காட்டி உரிமை தொகையை உங்கள் டெல்லி ஓனர்கள்தான் நிறுத்துவார்கள் என்பதே காரணம் என முதலமைச்சர் பதிலடி கொடுத்துள்ளாா்
“காப்பி, பேஸ்ட் அரசியல் என்பது காலங்காலமாக அதிமுகவின் வாடிக்கை என்பதை மக்கள் அறிவார்கள்” என குறிப்பிட்ட அவர், “DMK Women Power Engine முன் உங்கள் டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது என்றும் விமர்சித்துள்ளாா். திராவிட மாடல் அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் உங்கள் உறக்கத்தை கெடுத்து ஹிட் அடித்துள்ளது. எடப்பாடி உரிமை கொண்டாடுவதிலிருந்தே ரூ.5,000 திட்டம் பெரிய வெற்றி என்பதை புரிந்துகொள்ளலாம்” என்றும் கூறியுள்ளாா்.
இந்நிலையில், விடியல் பயணம், புதுமைப் பெண், உரிமைத் தொகை உள்ளிட்ட மகளிர் நலத் திட்டங்களை விளக்க திமுக மகளிர் அணியினர் மாநிலம் முழுவதும் களமிறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்கள்” இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளாா்.
மூச்சு இறைக்கும் அளவுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம் – முதல்வர் பெருமிதம்


