Homeசெய்திகள்தமிழ்நாடுஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை

-

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை

ஆன்லைன் ரம்மியால் சுமார் 4 லட்சம் பணத்தை இழந்த திருச்சியை சேர்ந்த கூலி தொழிலாளி வில்சன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தமிழகத்தில் ஏற்கனவே ஆன்லைன் ரம்மியால் பாதிக்கப்பட்ட 42 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தும் தமிழக ஆளுநர் அலட்சியம் காட்டுவதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இதனிடையே மாநில அரசுகளுக்கு சட்டம் இயற்ற அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த அஞ்சல்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த வில்சன் என்ற கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.4 லட்சம் பணத்தை இழந்ததாக தெரிகிறாது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

MUST READ