கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டின் இடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.


ஈரான்-அமெரிக்கா போர் பதற்றத்திற்கு நடுவே சந்திப்பு அமெரிக்கா – ஈரான் இடையே தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்து வரும் நிலையில், போரை நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கடந்த பிப்ரவரியில் போர் தொடங்கிய பிறகு, பிரதமர் மோடியும் ஈரான் அதிபரும் நேரில் சந்தித்துக் கொள்வது இதுவே முதல்முறையாகும். இச்சந்திப்பின் போது:
இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் கூட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது.
பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது.
குறித்துப் பல முக்கிய முடிவுகள் விவாதிக்கப்பட்டன. முன்னதாக கடந்த ஜூன் மாதம் இருவரும் தொலைபேசி வாயிலாகப் பேசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்மேனிய பிரதமருடனும் முக்கிய ஆலோசனை இம்மாநாட்டின் இடையே, ஆர்மேனிய பிரதமர் நிகோல் பஷினியனையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பில் பாதுகாப்பு, பொருளாதாரம், மருந்துத் துறை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
