spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்ஐ.நா.வின் கருத்திற்கு இஸ்ரேல் கடும் கண்டனம்!

ஐ.நா.வின் கருத்திற்கு இஸ்ரேல் கடும் கண்டனம்!

-

- Advertisement -

 

ஐ.நா.வின் கருத்திற்கு இஸ்ரேல் கடும் கண்டனம்!
File Photo

வடக்கு காசாவில் இருந்து 11 லட்சம் மக்களை வெளியேற்றாவிட்டால், பட்டினி சாவு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. வடக்கு காசாவில் இருந்து 11 லட்சம் பேரை வெளியேற்ற தவறினால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்றும், ஐ.நா. அச்சம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

மகளிர் உரிமை மாநாடு – சோனியா காந்தி, பிரியங்கா காந்தி சென்னை வருகை

போரால் உயிரிழப்பவர்களை விட குடிநீர் மற்றும் உணவு இன்றி பட்டினியால் பலர் உயிரிழக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 50,000- க்கும் அதிகமான கருவுற்ற பெண்கள் உணவும், தண்ணீரும் இன்றி தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

அதனால் உடனடியாக வடக்கு காசாவில் சிக்கியுள்ளவர்களை வெளியேற அனுமதிக்க வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா.வின் இந்த கருத்திற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களை வெளியேற அனுமதிக்கக் கோருவதற்கு பதிலாக ஆயுதங்களை கைவிட ஹமாஸ் குழுவினருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார்.

அரசுக்கு எதிராக தொழிலாளர்களிடம் கோஷங்களை எழுப்பி வரும் மாவோயிஸ்ட்டுகள்!

இதற்கிடையில், காசாவில் பிணைக் கைதிகளாக இருந்த இஸ்ரேலிய நாட்டவர்கள் 250 பேர் மீட்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு படைத் தெரிவித்துள்ளது.

 

MUST READ