ஜப்பான் பிரதமர் மீது குண்டு வீச்சு
ஜப்பான் பிரதமர் ஃபுமிதோ கிஷிடா பேசிக்கொண்டிருந்த இடத்தில் திடீர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பினார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேல்சபை தேர்தலுக்கு முன் பிரச்சார உரையாற்றிக்கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பின் அந்நாட்டு பிரதமராக ஃபுமிதோ கிஷிடா பொறுப்பேற்றார்.
இந்நிலையில் ஜப்பானின் வகயாமா மாவட்டத்திற்கான கீழ்சபை இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. அதில் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கலந்துகொண்டு உரையாற்ற இருந்தார். அப்போது அவர் மீது புகை அல்லது குழாய் வெடிகுண்டு வீசப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், பிரதமரை பத்திரமாக வெளியேற்றினர். குண்டு வீசிய நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளருடன் பேசிக் கொண்டிருந்தபோது நடந்த சம்பவத்திற்குப் பிறகு கிஷிடா காயமின்றி அங்கிருந்து வெளியேறினார்.