Homeசெய்திகள்உலகம்உயிருடன் வாழும் நாஸ்ட்ரடாமஸ்' அதோஸ் சலோமின் 2026 கணிப்புகள்: உலக நாடுகளை அச்சுறுத்தும் அடுத்தடுத்த திருப்பங்கள்!

உயிருடன் வாழும் நாஸ்ட்ரடாமஸ்’ அதோஸ் சலோமின் 2026 கணிப்புகள்: உலக நாடுகளை அச்சுறுத்தும் அடுத்தடுத்த திருப்பங்கள்!

-

- Advertisement -

தற்காலத்தின் ‘நாஸ்ட்ரடாமஸ்’ என்று அழைக்கப்படும் பிரேசிலைச் சேர்ந்த 39 வயதுடைய ஆன்மீக மற்றும் சவகாச முறை ஆய்வாளர் அதோஸ் சலோம் (Athos Salomé), உலக அளவில் பல விசித்திரமான மற்றும் துல்லியமான கணிப்புகளால் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்த ஆண்டில் அவர் உலக நாடுகளுக்காகச் சொன்ன மூன்று முக்கிய கணிப்புகளில் இரண்டு ஏற்கனவே பலித்துவிட்ட நிலையில், தற்போது அவர் விடுத்துள்ள மூன்றாவது கணிப்பு உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உயிருடன் வாழும் நாஸ்ட்ரடாமஸ்' அதோஸ் சலோமின் 2026 கணிப்புகள்: உலக நாடுகளை அச்சுறுத்தும் அடுத்தடுத்த திருப்பங்கள்!

இஸ்ரேல் – ஈரான் மோதலும் பதற்றமும்
​இந்த ஆண்டிற்கான அதோஸ் சலோமின் முதல் கணிப்பு, மத்திய கிழக்கில் நிலவும் இஸ்ரேல் – ஈரான் இடையேயான பதற்றம் மற்றும் அணு ஆயுத விவகாரங்களை மையமாகக் கொண்டதாகும். அவர் எச்சரித்தபடியே, அங்கு அணு ஆயுத விவகாரங்களை சுற்றியுள்ள பதற்றங்களும் மோதல் சூழல்களும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன.

we-r-hiring

​2026 கால்பந்து உலகக்கோப்பை வெற்றி
​இரண்டாவது கணிப்பாக, 2026 கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் ஸ்பெயின் நாடு சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்றும், அதுவும் நெருப்பு நிறங்கள் அணிந்த அணி வெற்றி பெறும் என்றும் அவர் முன்னதாகவே கணித்திருந்தார். வியக்கத்தக்க வகையில் இக்கணிப்பும் அப்படியே நிறைவேறியுள்ளது.

​ரஷ்யா மற்றும் நேட்டோ நாடுகளுக்கு இடையே துருவப் பகுதிகளில் மோதல் அபாயம்
​தற்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இவரது மூன்றாவது மற்றும் மிக முக்கியமான கணிப்பு, வடதுருவப் பகுதிகள் குறித்தது ஆகும். ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையே துருவப் பகுதிகளில் மிகப்பெரிய மோதல் வெடிக்க வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். ​துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால், அங்கு மறைந்திருக்கும் எண்ணெய், எரிவாயு போன்ற இயற்கை வளங்களும், முக்கிய கடல் வர்த்தகப் பாதைகளும் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துள்ளன. இதனால் இப்பகுதி பல நாடுகளின் போட்டி மையமாக மாறியுள்ளதுடன், ராணுவப் படைகளின் குவிப்பு உலகளாவிய போராக மாறக்கூடிய அபாய எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.உயிருடன் வாழும் நாஸ்ட்ரடாமஸ்' அதோஸ் சலோமின் 2026 கணிப்புகள்: உலக நாடுகளை அச்சுறுத்தும் அடுத்தடுத்த திருப்பங்கள்!

​ஆப்பிரிக்காவின் சகேல் பகுதி மற்றும் நைஜீரியா நிலவரம்
​ஆப்பிரிக்காவின் சகேல் பகுதிகளில் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நைஜீரியாவின் வடக்கு பகுதிகளில் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடு அதிகரித்து வருவதால், மேற்கத்திய நாடுகளின் படைகள் வெளியேறிய பிறகு பல நாடுகள் மறைமுக மோதல்களில் ஈடுபடக் கூடும் என அவர் நம்புகிறார்.

​கணிப்புகள் குறித்த அதோஸ் சலோமின் விளக்கம்
​இவ்வளவு துல்லியமாக எப்படி கணிக்க முடிகிறது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அதோஸ் சலோம், தனது கணிப்புகள் யாவும் நீண்ட கால நிகழ்வுப் போக்குகள் மற்றும் கபால ஆன்மீக ஆய்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை என்று விளக்கியுள்ளார். எந்தவொரு கணிப்பும் 100% உறுதியானது என்று கூற முடியாது என்றும், கணிப்புகள் என்பவை ஒரு சாத்தியக்கூறுகள் (Probability) மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது! அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி குற்றச்சாட்டு!​

MUST READ