spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்ஜப்பானை சேர்ந்த அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஜப்பானை சேர்ந்த அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

-

- Advertisement -

2024ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்புக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலகளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

we-r-hiring

அதன்படி நடப்பு ஆண்டிற்கான நோபல் பரிசுகள் 7-ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இலக்கியத்திற்கான நோபல் பரிசினை தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங், தமது மனித வாழ்க்கை குறித்த கவிதை தொகுப்பிற்காக பெறுகிறார்.

இந்த நிலையில், 2024-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அணு
ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதற்காக அந்த அமைப்பிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்பு அணு ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதனை தொடர்ந்து, வரும் 14ஆம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு  அறிவிக்கப்பட உள்ளது. வரும் டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் நோபல் பரிசுகள் வழங்கப்படுகிறது.

MUST READ