Homeசெய்திகள்உலகம்டெலிகிராம் செயலியின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் கைது

டெலிகிராம் செயலியின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் கைது

-

டெலிகிராம் செயலியின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை கொண்ட டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமாக ரஷ்யாவை சேர்ந்த  பொறுப்பு வகித்து வந்தார். போதைப்பொருள் கடத்தல், ஆபாசப் பதிவுகளை பகிர்வதற்கு டெலிகிராம் செயலியை பயன்படுத்த ஆதரவாக இருந்த உள்ளிட்ட குற்றத்திற்காக பாவெல் துரோவுக்கு எதிராக பிரான்ஸ் அரசு கைது உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்தநிலையில் அஜர்பைஜான் நாட்டிற்கு தனி விமானம் மூலம் சென்ற, துரோவை பொர்காட் விமான நிலையத்தில் பிரான்ஸ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், துரோவுக்கு சட்ட உதவிகள் வழங்க அனுமதிக்க வேண்டும் என ரஷ்ய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

MUST READ