Homeசெய்திகள்உலகம்பாகிஸ்தான் வரலாற்றை மாற்றி முதலமைச்சராகப் பதவியேற்ற பெண்!

பாகிஸ்தான் வரலாற்றை மாற்றி முதலமைச்சராகப் பதவியேற்ற பெண்!

-

 

பாகிஸ்தான் வரலாற்றை மாற்றி முதலமைச்சராகப் பதவியேற்ற பெண்!

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ் பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையை மரியம் நவாஸ் பெற்றார்.

இயற்கை விவசாயி திருமூர்த்தி மறைவு – சீமான் இரங்கல்!

பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் ஐந்து மாகாண சட்டப்பேரவைகளுக்கும் பொதுத்தேர்தல் கடந்த பிப்ரவரி 08- ஆம் தேதி நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாகாணத்தில் முஸ்லீம் லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் சுயேச்சைகள் ஆதரவு மரியம் நவாஸுக்கு கிடைத்தது.

50 வயதான மரியம் நவாஸ் தனது தந்தையும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் முன்னிலையில் பஞ்சாப் மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மரியம் நவாஸ், “பெண்கள் தலைமைப் பதவிக்கு வருவது வரும் காலத்தில் தொடரும்” என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.

திமுக அரசை கண்டித்து அதிமுக வருகிற 04ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்

இஸ்லாமிய நாடுகளில் அரசு பதவிகளில் முக்கியத்துவம் தரப்படாத நிலையில், பாகிஸ்தான் நாட்டில் இத்தகைய நிகழ்வு மற்ற நாடுகளை ஊக்கமும் உற்சாகமும் அடைய செய்துள்ளது என்றால் மிகையாகாது.

முதல் பெண் முதலமைச்சர் மரியம் நவாஸுக்கு உலக நாடுகளின் பெண் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்துள்ளனர்.

MUST READ