Homeசெய்திகள்உலகம்குவாட் நாடுகளின் கூட்டம் ரத்து- காரணம் என்ன தெரியுமா?

குவாட் நாடுகளின் கூட்டம் ரத்து- காரணம் என்ன தெரியுமா?

-

- Advertisement -

 

குவாட் நாடுகளின் கூட்டம் ரத்து- காரணம் என்ன தெரியுமா?
File Photo

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் அடுத்த வாரம் நடைபெறவிருந்த குவாட் நாடுகளின் கூட்டம் ரத்துச் செய்யப்படுவதாக அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை திடீர் மரணம்

குவாட் நாடுகளில் (Quad Countries) இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் அடுத்த வாரம் இறுதியில் குவாட் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறவிருந்தது. இந்த கூட்டத்தை ஆஸ்திரேலியா நாடு தலைமையேற்று நடத்தவிருந்தது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, குவாட் அமைப்பின் கூட்டத்தை ரத்து செய்வதாக ஆஸ்திரேலிய பிரதமர் அறிவித்துள்ளார்.

சமீபத்திய புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தனது காதலனை மறைமுகமாக வெளியிட்டாரா?

அமெரிக்க அரசின் கடன் சிக்கல் பிரச்சனைத் தீவிரமடைந்துள்ள நிலையில், தனது ஆஸ்திரேலியா பயணத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரத்துச் செய்ததாகத் தெரிகிறது. எனினும், வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் ஜப்பானில் நடைபெறும் ஜி7 நாடுகளின் கூட்டத்தில், இந்த நான்கு நாடுகளின் தலைவர்களும் சந்தித்துப் பேசுவார்கள் எனத் தெரிகிறது.

இந்த கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பங்கு பெறுவதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ