Homeசெய்திகள்உலகம்சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம்

-

ஊதிய உயர்வை வலியுறுத்தி சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சாம்சங், தென் கொரியாவை சேர்ந்த எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும். இந்தியாவில் சாம்சங் செல்போன்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இதேபோல் சாம்சங் நிறுவனமும் இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தக சந்தையை கொண்டுள்ளது இந்த நிலையில் தென்கொரியாவை சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் அறிவித்துள்ளனர். ஊதிய உயர்வை வலியுறுத்தி சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. தங்களுக்கு 5.1% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்த அறிவிப்பில் சுமார் 20,000 மேற்பட்டோர் பங்கே இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக samsung உதிரி பாகங்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சங்க இந்த அறிவிப்பு அதன் பங்கு விளையும் பொதுவாக குறைத்துள்ளது. புதன்கிழமை ஆன இன்று மட்டும் சாம்சங் நிறுவன பங்குகளின் விலை மூன்று சதவீதத்திற்கு மேல் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

MUST READ