Homeசெய்திகள்உலகம்'சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் தமிழர்'- விரிவான தகவல்!

‘சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் தமிழர்’- விரிவான தகவல்!

-

- Advertisement -

 

'சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் தமிழர்'- விரிவான தகவல்!
File Photo

தற்போதைய சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 13- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் சிங்கப்பூரில் தேர்தலை நடத்தி புதிய அதிபரைத் தேர்வு செய்ய வேண்டும். அதிபர் ஹலிமா யாக்கோப், இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

we-r-hiring

“அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்வோம்!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

இந்த நிலையில், சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் யார் போட்டியிடுவார்? என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு மக்களிடையே எழுந்திருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும், சமுதாய கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், தமிழருமான தர்மன் சண்முகரத்தினம், நேற்று (ஜூன் 08) சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்- க்கு கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில், “சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிட தான் விரும்புவதால், தனது அமைச்சர் பதவி, மக்கள் செயல் கட்சியின் பதவி, அரசு சார்ந்த பொறுப்புகள் என அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். இவரது பதவி விலகல் வரும் ஜூலை 7- ஆம் தேதி அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட பிரதமர் லீ சியன் லூங், “தர்மன் சண்முகரத்தினத்தின் ராஜினாமா சிங்கப்பூர் அமைச்சரவைக்கு மிகப்பெரிய இழப்பு” என்று குறிப்பிட்டு, அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ஓபிஎஸ் எப்படி நிவாரணம் கோர முடியும்?: ஈபிஎஸ் தரப்பு

66 வயதான தர்மன் சண்முகரத்தினம், சிங்கப்பூரின் நிதித்துறை, கல்வித்துறை, மனிதவளத்துறை அமைச்சராகவும், அந்நாட்டின் துணைப் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார். அத்துடன், சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அரசியல் மற்றும் அமைச்சரவையில் சிறப்பாக செயல்பட்ட தர்மன், பிரதமர் லீ சியன் லூங்- க்கு பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்களில் ஆலோசனைகளையும் வழங்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ