Homeசெய்திகள்உலகம்கொரோனாவின் அடுத்த வெர்ஷன்! 5 கோடி பேர் உயிரிழக்கலாம் என எச்சரிக்கை

கொரோனாவின் அடுத்த வெர்ஷன்! 5 கோடி பேர் உயிரிழக்கலாம் என எச்சரிக்கை

-

கொரோனாவின் அடுத்த வெர்ஷன்! 5 கோடி பேர் உயிரிழக்கலாம் என எச்சரிக்கை

எதிர்காலத்தில் கொரோனாவை விட மிகக் கொடிய வைரஸ் பரவக் கூடும் என சீன விஞ்ஞானி ஷி ஸெங்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸ்கள் குறித்து தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருபவர் ஷி ஸெங்லி. இவர் வெளவால்கள் மூலம் கொரோனா போன்ற வேகமாக பரவக்கூடிய பெருந்தொற்று விரைவில் பரவக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த தொற்று சீனாவில் சார்ஸ் போன்ற பேரிடரை ஏற்படுத்தும் என வூகான் தொற்று நோய் ஆய்வகமும், ஷீயின் குழுவினரும் கூட்டாக நடத்திய ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.

கொரோனாவை போல 7 மடங்கு உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய பெருந்தொற்று உருவாகும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொற்று தாக்கும் பட்சத்தில் 5 கோடி உயிர்கள் வரை பலியாகலாம் எனவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வில் 40 வகையான கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் இருப்பதாகவும், அதில் பாதிக்கும்மேல் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த வைரசில் மூன்று வகை மிக மிக ஆபத்தை ஏற்படுத்தி, பல உயிர்களை கொன்றுவிடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

MUST READ