
சமூக வலைதளமான ட்விட்டருக்கு புதிய தலைமை நிர்வாகியை நியமித்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இரும்புக்கை மாயாவி படத்துல நீ நடிச்சே ஆகணும்னு லோகேஷ் சொல்லிட்டாரு… அசத்தல் அப்டேட் கொடுத்த சதிஷ்!
ட்விட்டர் நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், சில மாதங்களுக்கு முன்பு வாங்கினார். இதன் பின்னர், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் மற்றும் மூத்த அதிகாரிகளை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்தார்.
இந்த பணியிடம் காலியாக உள்ள நிலையில், அதற்கான புதிய நபரைத் தேடும் பணியில் எலான் மஸ்க் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்துக்கு புதிய தலைமை நிர்வாகியைத் தேர்வு செய்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அனுஷ்கா படத்திற்காக பாடகர் ஆகும் தனுஷ்!
புதிய சி.இ.ஓ. ஆறு மாதங்களில் தங்களது பணியைத் தொடர்வார் என குறிப்பிட்டுள்ள அவர், தனது பங்களிப்பு குறித்தும், அறிவிப்பைக் குறித்தும் வெளியிட்டார்.