உக்ரைனில் ரஷ்யா நடத்தியதாக கூறப்படும் புதிய வான்வழித் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததுடன், 79 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Dnipropetrovsk மாகாணத்தில் உள்ள Pavlohrad நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் இந்த தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


வணிக வளாகத்தை குறிவைத்த தாக்குதல்
Pavlohrad பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 79 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் குழந்தைகளும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து Pavlohrad நகரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் துக்க தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு மற்றும் பொதுமக்கள் பகுதிகளிலும் பாதிப்பு
தாக்குதலால் நகரின் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே Dnipro உள்ளிட்ட பகுதிகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு பொதுமக்கள் பயன்படுத்தும் தொழிற்சாலை மற்றும் உள்கட்டமைப்பு பகுதிகளும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் கடும் குற்றச்சாட்டு
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்புகளை ரஷ்யா திட்டமிட்டு குறிவைப்பதாக உக்ரைன் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா, பொதுமக்கள் வாழ்வை சீர்குலைத்து அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
கீவிலும் தொடரும் தாக்குதல்
இதற்கிடையே உக்ரைன் தலைநகர் Kyiv-லும் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்கள் தொடர்ந்துள்ளன. வெள்ளிக்கிழமை அதிகாலை இரண்டு பெட்ரோல் நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக Kyiv-ல் உள்ள குடியிருப்பு கட்டிடத்தையும் ட்ரோன் தாக்குதல் பாதித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடரும் ரஷ்யா–உக்ரைன் போர்
ரஷ்யா–உக்ரைன் போர் நான்காவது ஆண்டை கடந்து தொடர்ந்து வரும் நிலையில், இரு தரப்பினரும் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகள் நடைபெற்று வந்தாலும், மறுபுறம் தாக்குதல்கள் அதிகரித்து வருவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை கோபுரம் மீதான கொடூரத் தாக்குதல்: 25-வது ஆண்டு நினைவு தினம் இன்று!
