Homeசெய்திகள்உலகம்ஒடிசாவில் மீட்கப்பட்ட 5 ஒராங்குட்டான் குட்டிகள்: இந்தியாவுக்கு இந்தோனேசியா அரசு அவசரக் கடிதம்!

ஒடிசாவில் மீட்கப்பட்ட 5 ஒராங்குட்டான் குட்டிகள்: இந்தியாவுக்கு இந்தோனேசியா அரசு அவசரக் கடிதம்!

-

- Advertisement -

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அடர்ந்த காடுகளில் மட்டுமே இயற்கையாக வாழக்கூடிய அரிய வகை உயிரினமான ஒராங்குட்டான் (Orangutan) குட்டிகள் 5, சமீபத்தில் ஒடிசா மாநில வனப்பகுதியில் மீட்கப்பட்டன. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்தோனேசிய அரசு இது தொடர்பாக இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது.ஒடிசாவில் மீட்கப்பட்ட 5 ஒராங்குட்டான் குட்டிகள்: இந்தியாவுக்கு இந்தோனேசியா அரசு அவசரக் கடிதம்!

“எங்கள் நாட்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்”: இந்தோனேசியா சந்தேகம்
ஒடிசாவில் மீட்கப்பட்ட அந்த 5 ஒராங்குட்டான் குட்டிகளும் தங்கள் நாட்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று இந்தோனேசிய வனத்துறை அமைச்சகம் இந்திய வனத்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச அளவில் செயல்படும் வனவிலங்கு கடத்தல் கும்பல், இந்தக் குட்டிகளை இந்தோனேசியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வந்து இந்தியாவில் விட்டுச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

we-r-hiring

டிஎன்ஏ (DNA) சோதனைக்குப் பின் தாயகம் திரும்ப நடவடிக்கை
மீட்கப்பட்ட ஒராங்குட்டான் குட்டிகளுக்கு உடனடியாக டிஎன்ஏ (DNA) பரிசோதனை செய்யுமாறு இந்தோனேசிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அந்தச் சோதனையின் முடிவில், அவை இந்தோனேசிய காடுகளைச் சேர்ந்தவை என்பது உறுதியானால், அவைகளைச் சொந்த நாட்டிற்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுப்பதாக இந்தோனேசிய வனத்துறை தெரிவித்துள்ளது.

சதித்திட்டம் குறித்து தீவிர விசாரணை
சர்வதேச அளவில் அழிவின் விளிம்பில் உள்ள ஒராங்குட்டான்கள் எவ்வாறு இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டன, இதன் பின்னணியில் உள்ள சர்வதேசக் கடத்தல் கும்பல் யார் என்பது குறித்து இந்திய வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டுப் பணியகமும் (WCCB) ஒடிசா மாநில வனத்துறையும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. மீட்கப்பட்ட 5 குட்டிகளும் தற்போது சிறப்புப் மருத்துவக் கண்காணிப்பில் ஆரோக்கியமாக வைக்கப்பட்டுள்ளன.

சீனாவில் பயங்கரம்: துறைமுகத்தில் நின்ற சரக்குக் கப்பலில் தீ விபத்து – 25 பேர் பரிதாப பலி!

MUST READ