ரஷ்யப் படைகள் மீது பாலியல் வன்கொடுமை புகார்
ரஷ்யப் படைகளால் உக்ரைன் நாட்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக அந்நாட்டின் முதல் குடிமகளான ஜெலன்ஸ்கா குற்றஞ்சாட்டி உள்ளார்.
உக்ரைனின் முதல் குடிமகள் ஜெலன்ஸ்கா குற்றச்சாட்டு
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் ஓராண்டுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகள் என அனைத்து கட்டமைப்புகளையும் உருக்குலைக்கும் ரஷ்யப் படைகள் பெண்கள், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

171 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்
இது தொடர்பாக உக்ரைனில் போர் குற்றம் மற்றும் பாலியல் வன்கொடுமை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவர் ராபர்ட்டா மெட்சோலா சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த நிகழ்வில் உக்ரைனின் முதல் குடிமகளும், அதிபரின் மனைவியுமான ஜெலன்ஸ்கா பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ரஷ்யப் படைகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்கள் அளித்த புகாரில் இதுவரை 171 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். பெண்கள் மட்டுமல்லாது 13 சிறுமிகள், 39 ஆன்களும் ரஷ்யப் படைகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.