Homeசெய்திகள்உலகம்"இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா துணை நிற்கும்"- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேட்டி!

“இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா துணை நிற்கும்”- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேட்டி!

-

- Advertisement -

 

"இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா துணை நிற்கும்"- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேட்டி!
Photo: ANI

இஸ்ரேல்- ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகருக்கு சென்றடைந்தார். அங்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரில் சந்தித்து பேசினார். தற்போது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் நிலவும் சூழல், மக்களின் நிலை உள்ளிட்டவைக் குறித்து அதிபர் ஜோ பைடன் கேட்டறிந்தார்.

ஹாலிவுட் நடிகருடன் தங்கலான் நடிகை… புகைப்படம் வைரல்…

பின்னர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், “இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா முழுமையாக துணை நிற்கிறது. இஸ்ரேலுக்கு என்னென்ன உதவிகள் தேவையோ அனைத்தையும் அமெரிக்கா செய்து தரும். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பாதையை ஹமாஸ் அமைப்பினர் பின்பற்றி வருகின்றனர்” என்று குற்றம் சாட்டினார்.

வில் ஸ்மித்துடன் விவாகரத்து இல்லை… சேர்ந்து வாழ ஜடா முடிவு…

அதைத் தொடர்ந்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு “ஹமாஸ் படையினர் தற்போதைய நாஜிப்படையினராக மாறி உள்ளனர். ஹமாஸ் படையினர் இதுவரை 1,400 இஸ்ரேலியர்களைக் கொன்றுள்ளனர். அமெரிக்காவின் ஒத்துழைப்புக்கும் உதவிக்கும் மனமார்ந்த நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ