வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதாக வெளியான செய்தியை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.
கத்தார் மற்றும் பிற வெளிநாட்டு வங்கிகளில் உள்ள ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா சம்மதித்துள்ளதாக, ஈரானின் உயர்மட்ட ஆதாரம் ஒன்றை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தியைத் தொடர்ந்தே அமெரிக்கா இந்த மறுப்பைத் தெரிவித்துள்ளது.

ஈரானிய தரப்பில் கூறப்பட்ட அதே தகவல், “இந்தச் சொத்துக்களை விடுவிப்பதற்கான முன்மொழிவு, ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்வதோடு நேரடியாகத் தொடர்புடையது” என்றும் குறிப்பிட்டிருந்தது.
இது தொடர்பான கூடுதல் தகவல்கள் தொடர்ந்து எதிர்பார்க்கப்படுகின்றன.
அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை; முட்டுக்கட்டை போடும் இஸ்ரேல்
