spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்ரூ.52 கோடிக்கு ஏலம் போன ஒற்றை வாழைப்பழம்: இதன் சிறப்பு என்ன தெரியுமா?

ரூ.52 கோடிக்கு ஏலம் போன ஒற்றை வாழைப்பழம்: இதன் சிறப்பு என்ன தெரியுமா?

-

- Advertisement -

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் உலகின் விலை உயர்ந்த வாழைப்பழம் என்ற சாதனையை படைத்துள்ளது. டேப் மூலம் சுவரில் பதிக்கப்பட்டுள்ள இந்த வாழைப்பழம் 62 லட்சம் டாலர்களுக்கு அதாவது சுமார் 52.4 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலம் போனது.

ஆனால், இந்த வாழைப்பழத்தை சாதாரண வாழைப்பழம் என்று தவறாக நினைத்துவிடாதீர்கள், இது புகழ்பெற்ற ‘காமெடியன்’ மொரிசியோ கட்டெலன் உருவாக்கியது.

we-r-hiring

ஏலத்திற்குப் பிறகு இந்த வாழைப்பழம் உலகின் மிக விலையுயர்ந்த பழமாக மாறியுள்ளது. நவம்பர் 20 அன்று இந்த வாழைப்பழத்திற்கான ஏலம் நடத்தப்பட்டது. ஆனால், கலைப்படைப்புக்கான ஏலம் வேகமாக கூடியதால் ஏற்பாட்டாளர்கள் ஆச்சரியமடைந்தனர்.

கேட்டலனின் கலைப்படைப்பில் காமெடியாக வடிவமைக்கப்பட்ட இந்த வாழைப்பழம் வெறும் $0.35 (ரூ. 29) க்கு வாங்கப்பட்டது. அது சுவற்றில் டேப்பால் ஒட்டப்பட்டதும் ஆரம்ப விலை 8 லட்சம் டாலரில் இருந்து 52 லட்சமாக அதிகரித்தது. இறுதியில் 62 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போனது. வாழைப்பழம் அழுகும்போது அதை எப்படி மாற்றுவது என்பது குறித்த வழிமுறைகளும் இதில் உள்ளன.

MUST READ