HomePongal Specialபொங்கல் தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டர்களை வெளியிட்ட 'இட்லி கடை' படக்குழு!

பொங்கல் தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டர்களை வெளியிட்ட ‘இட்லி கடை’ படக்குழு!

-

- Advertisement -

பொங்கல் தினத்தை முன்னிட்டு இட்லி கடை படக்குழு ஸ்பெஷல் போஸ்டர்களை வெளியிட்டுள்ளது.பொங்கல் தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டர்களை வெளியிட்ட 'இட்லி கடை' படக்குழு!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் இட்லி கடை. ராயன் படத்திற்கு பிறகு இந்த படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். இந்த படம் தனுஷின் 52 வது படமாகும். இந்த படத்தில் தனுஸுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. மேலும் இட்லி கடை படத்தில் அருண் விஜய், ராஜ் கிரண் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். கிரண் கௌஷிக் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தேனி பகுதியில் தொடங்கப்பட்டு அதை தொடர்ந்து பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. பொங்கல் தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டர்களை வெளியிட்ட 'இட்லி கடை' படக்குழு!அதேசமயம் இந்த படமானது 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் 2025 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றன. இந்நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ