Homeதிருக்குறள்108 – கயமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

108 – கயமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…அதிரடியாக குறைந்த தங்கம் விலை

1071. மக்களே போல்வர் கயவர் அவரன்ன
          ஒப்பாரி யாங்கண்ட தில்

கலைஞர் குறல் விளக்கம்குணத்தில் ஒருவர் கயவராக இருப்பார். ஆனால் நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.

we-r-hiring

1072. நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
          நெஞ்சத் தவலம் இலர்

கலைஞர் குறல் விளக்கம்எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப்படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்!

1073. தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
          மேவன செய்தொழுக லான்.

கலைஞர் குறல் விளக்கம்புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.

1074. அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
          மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்

கலைஞர் குறல் விளக்கம்பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களை விடத் தாம் சிறந்தவர்கள் என்று கர்வம் கொள்வார்கள்.

1075. அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்
          அவாவுண்டேல் உண்டாம் சிறிது

கலைஞர் குறல் விளக்கம்தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.

1076. அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
          மறைபிறர்க் குய்த்துரைக்க லான்

கலைஞர் குறல் விளக்கம்மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்.

1077. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
          கூன்கையர் அல்லா தவர்க்கு

கலைஞர் குறல் விளக்கம்கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கையைக்கூட உதற மாட்டார்கள்.

1078. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
          கொல்லப் பயன்படும் கீழ்

கலைஞர் குறல் விளக்கம்குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரிய பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்.

1079. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
         வடுக்காண வற்றாகும் கீழ்

கலைஞர் குறல் விளக்கம்ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பொறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டு மென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்.

1080. எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
          விற்றற் குரியர் விரைந்து

கலைஞர் குறல் விளக்கம்ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள. தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும்.

MUST READ