spot_imgspot_img
Homeதிருக்குறள்110 - குறிப்பறிதல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

110 – குறிப்பறிதல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

110. குறிப்பறிதல் கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1091. இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
          நோய்நோக்கொன் றந்நோய் மருந்து

கலைஞர் குறல் விளக்கம்காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன: ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை: மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை.

we-r-hiring

1092. கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
          செம்பாகம் அன்று பெரிது

கலைஞர் குறல் விளக்கம்கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது!

1093. நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
          யாப்பினுள் அட்டிய நீர்

கலைஞர் குறல் விளக்கம்கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது.

1094. யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
          தானோக்கி மெல்ல நகும்

கலைஞர் குறல் விளக்கம்நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என்மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா?

1095. குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
          சிறக்கணித்தாள் போல நகும்

கலைஞர் குறல் விளக்கம்அவள் என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர. ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு தனக்குள் மகிழ்கிறாள்.

1096. உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்
          ஒல்லை உணரப் படும்

கலைஞர் குறல் விளக்கம்காதலை மறைத்துக் கொண்டு,   புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்.

1097. செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
           உறாஅர்போன் றுற்றார் குறிப்பு

கலைஞர் குறல் விளக்கம்பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்.

1098. அசையியற் குண்டாண்டோர் ஏர்யான் நோக்கப்
          பசையினள் பைய நகும்

கலைஞர் குறல் விளக்கம்நான் பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள்.

1099. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
          காதலார் கண்ணே உள

கலைஞர் குறல் விளக்கம்காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்.

1100. கண்ணோடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல

கலைஞர் குறல் விளக்கம்ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன.

MUST READ