Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுக விதிகளில் செய்த திருத்தங்களை அங்கீகரிக்க கூடாது- தேர்தல் ஆணையத்தில் மனு

அதிமுக விதிகளில் செய்த திருத்தங்களை அங்கீகரிக்க கூடாது- தேர்தல் ஆணையத்தில் மனு

-

- Advertisement -

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட கட்சியின் திருத்த விதிகளுக்கு அங்கீகாரம் அளிக்கக் கூடாது என அதிமுக அடிப்படை உறுப்பினர் ராம்குமார் ஆதித்தன் இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை அங்கீகரிக்கக் கூடாது என வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் அதுவரை பொதுக்குழு தீர்மானங்களை ஏற்க கூடாது என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். சிவில் வழக்குகள் முடியும் வரை கட்சி இரட்டை இலை சின்னம் கோரும் எந்த மனுவையும் ஏற்கக்கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தது செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கினர் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ