- Advertisement -
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம், தொடர்ந்து பல சர்வதேச விருதுகளை குவித்து வருகிறது.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்திரம் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த படம் மாமனிதன். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். மாமனிதன் திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வெற்றி பெற்றதோடு, பல்வேறு சர்வதேச விருதுகளையும் வென்று வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற 29-வது செடோனா சர்வதேச திரைப்பட விழாவில், மாமனிதன் திரைப்படம் சிறந்த ஊக்கமளிக்கும் படம் எனும் பிரிவில், விருது வென்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை இயக்குநர் சீனு ராமசாமி டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.