கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படத்திற்கு பிறகு ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இந்தப் படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தில் ராஜு தயாரிக்க தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். திருநாவுக்கரசு இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
இதில் ராம்சரணுடன் இணைந்து கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் ராம்சரண் கலெக்டராக நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் தான் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
Christmas ki kaluddam…😉🔥#GameChanger
— Sri Venkateswara Creations (@SVC_official) July 21, 2024
இதற்கிடையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ஜரகண்டி எனும் பாடலும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த படமானது 2024 கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. இருப்பினும் விரைவில் இதன் ரிலீஸ் தேதி போஸ்டருடன் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.