Homeசெய்திகள்அரசியல்ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு பதிவு நிறைவு - 74.79% வாக்கு பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு பதிவு நிறைவு – 74.79% வாக்கு பதிவு

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் மாலை 7 மணி நிலவரப்படி 1, 69,945 வாக்காளர்கள் வாக்கு செலுத்தி உள்ளனர் .மொத்தம் 74.79%  வாக்கு பதிவு நடை பெற்றுள்ளது. அதில் ஆண்கள் 82 ,021 ,பெண்கள் 87,907, மூன்றாம் பாலினத்தவர்கள் 17 பேர் என மொத்தம் 1, 69,945 பேர் வாக்களித்துள்ளனர் என தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் அறிவித்தள்ளார் .

ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 வாக்குச்சாவடிகளில் 237 வாக்குச்சாவடிகளில் 7 மணி அளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 138 வது வாக்குச்சாவடியில் 6 மணிக்கு மேல் 368 பேருக்கு டோக்கன் வழங்கி வாக்குப்பதிவு நடைபெற்றது.

we-r-hiring

தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக, ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியில் பிப்ரவரி 27, 2023 இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. 238 வாக்குச் சாவடிகளில் 2,26,898  வாக்காளர்கள் உள்ளனர்.

திராவிடர் கழக நிறுவனர் ‘பெரியார்’ ஈ.வெ.ராமசாமியின் கொள்ளுப் பேரனும், தமிழக முன்னாள் மக்களவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான, காங்கிரஸ் எம்.எல்.ஏ., இ.திருமகன் ஈவேரா (46) சட்டமன்ற உறுப்பினர் ஜனவரி 4, 2023 அன்று மாரடைப்பால் இறந்தார். அவரின் திடீர் மறைவைத் தொடர்ந்து, தமிழகத்தில் , ஈரோடு (கிழக்கு) சட்டசபை தொகுதியில், இடைத்தேர்தல் நடைபெற்றது.

திருமகன் ஈவேரா இறந்த இரண்டு வாரங்களில்  தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 19ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், ஈரோடு (கிழக்கு) சட்டப்பேரவைத் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்க முடிவு செய்து அறிவித்தார்.

 

முதலில், ஈவேராவின் சகோதரர் இ.சஞ்சய் சம்பத் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் இளங்கோவன் அவர் போட்டியிட விரும்பவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஜனவரி 22 அன்று வேட்பாளராக நிறுத்தியது காங்கிரஸ்.

நடிகர்/அரசியல் வாதி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் (எம்என்எம்) கட்சி இதுவரை எந்த ஒரு பெரிய கட்சியுடனும் ஆதரவு தெரிவிக்கவில்லை , ஆனால் முதன்முறையாக காங்கிரஸுக்கு ஆதரவளித்தார்.

பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் முகாமில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அதிமுக வேட்பாளராக 2 முறை எம்எல்ஏவாக இருந்த கே.எஸ்.தென்னரசுவை நிறுத்தினார் பழனிச்சாமி .

அதிமுக வேட்பாளரின் தேர்வை கட்சியின் பொதுக்குழுவில் வைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து , பின்னர் திரு.தென்னரசுவின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதையடுத்து, அதிமுக வேட்பாளராக  களம் இறக்கப்பட்டார். அ.தி.மு.க., தனது கோட்டையாகக் கருதப்படும் மேற்குத் தமிழகத்தில் தொடர்ந்து பலமாகத் திகழ்கிறது என்பதை நிரூபிப்பதற்காக அ.தி.மு.க. போராடியது.

நாம் தமிழர் கட்சி மேனகா பெயரை வேட்பாளராக அறிவித்தது. தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (தேமுதிக) எஸ்.ஆனந்தை வேட்பாளராகக் தனித்துப் போட்டியிட அறிவித்தது.

இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது ஆளும் திமுகவுக்கு கவுரவமான விஷயமாக இருந்தாலும், இந்த முடிவு அதன் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகால அரசாங்கத்தின் மீதான வாக்கெடுப்பாகக் கருதப்படலாம் என்று இந்த தேர்தலை அனுகியது. மேலும் இது 2024 மக்களவைத் தேர்தலுக்கான வெற்றிக்கு முன்னோட்டமாக அமையும் என்று கருதப்படுகிறது.

காங்கிரஸ், அ.தி.மு.க , நாம் தமிழர் கட்சி , தெ.மு.தி.க உள்ளிட்ட மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனால், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தலா 16 சின்னங்களைக் கொண்ட 5 வாக்குச் சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

இத்தொகுதியில் ஆண்கள் 1,10,713, பெண்கள் 1,16,140, ​​திருநங்கைகள் 23 என மொத்தம் 2,26,898 வாக்காளர்கள் உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 வாக்குச்சாவடிகளில் 237 வாக்குச்சாவடிகளில் 6 மணி அளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 138 வது வாக்குச்சாவடியில் 6 மணிக்கு மேல் 368 பேருக்கு டோக்கன் வழங்கி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 74.79%  வாக்கு பதிவு நடை பெற்றுள்ளது என தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் அறிவித்தள்ளார் .

 

MUST READ