Homeசெய்திகள்க்ரைம்போலீசாரை தாக்கிய ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

போலீசாரை தாக்கிய ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

-

- Advertisement -

மதுரையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மதுரையில் கடந்த 22 ஆம் தேதி டோரா என்கிற பாலமுருகன் உலகநேரி அருகே கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வினோத், மேலூர் மாரி, புலி என்கிற விஜயராகவன், சூர்யா என்கிற மார்க்கெட் சூர்யா, கிருஷ்ணா என்கிற ஜெகதீஸ்வரன் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

we-r-hiring

இந்நிலையில் இன்று(28.02.2023) அதிகாலை வண்டியூர் அருகே உள்ள ப.ஆண்டார்கொட்டாரம் பகுதிக்கு கொலைக் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அங்கு பதுங்கி இருந்த வினோத் காவல்துறையினரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயல்கிறார். அதில் சரவணகுமார் என்ற போலீசுக்கு வெட்டுகாயம் ஏற்ப்பட்டது. இதனையடுத்து போலீசார் தற்காப்புக்காக குற்றவாளி வினோத்குமாரின் காலில் சுட்டு அவரை பிடித்தனர்.

அவருக்கு மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மதுரையில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு ரவுடியை பிடித்த சம்பவம் ரவுடிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ