அந்தகன் படத்தில் புதிய பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிரசாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் அந்தகன். இந்த படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். ஸ்டார் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் ப்ரீத்தி தியாகராஜன் இதனை தயாரித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் பிரசாந்த்துடன் இணைந்து பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, கார்த்திக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரில்லர் கதை களத்தில் உருவாகி இருக்கும் இந்த படமானது இந்தி மொழியில் வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். ஏற்கனவே இந்த அந்தாதுன் திரைப்படம் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலுமே இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.இருப்பினும் இந்த படமானது நீண்ட வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே படத்தின் அடுத்த அடுத்த பாடல்களும் டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடல் அதாவது அந்தகன் ஆந்தம் பாடல் இன்று (ஜூலை 24) மதியம் 2.10 மணி அளவில் வெளியாகும் என பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த பாடலை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அனிருத் ஆகியோர் பாடியுள்ளனர். அதே சமயம் இந்த பாடலை நடிகர் விஜய் வெளியிட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.