- Advertisement -
சென்னை தாம்பரம் அருகே ரயிலில் அடிபட்டு கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் எம்.சி.சி கல்லூரி மாணவி நிகிதா(19), இவர் பி.எஸ்.சி சைக்காலஜி முதலாம் ஆண்டு படித்துவந்தார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் கொல்லம் ஆகும்.

கிழக்கு தாம்பரம் ஆனந்த புரத்தில் மகளிர் விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்த இவர், இன்று இரும்புலியூரில் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போது சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் நிகிதா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறித்த தாம்பரம் இருப்பு பாதை போலீசார் பிரேததை கைத்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.
தாம்பரம், பெருங்களத்தூர் பகுதியில் தொடர்ச்சியாக இத்தகைய உயிரிழப்புகள் நடப்பது மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
