ஜூட் ஆண்டனி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தில் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான 2018 என்ற திரைப்படத்தை இயக்கியவர் தான் ஜூட் ஆண்டனி ஜோசப். 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த படமானது பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றது. அதைத்தொடர்ந்து ஜூட் ஆண்டனி லைக்கா நிறுவனத்துடன் கைகோர்க்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. மேலும் சமீபத்தில் நடிகர் சிம்பு, ஜூட் ஆண்டனி இயக்கத்தில் புதிய படம் ஒன்று நடிக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டது. அதன்படி இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க போவதாகவும் இதில் சிம்புவுடன் இணைந்து மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 செப்டம்பர் மாதத்தில் நடுவில் தொடங்க இருப்பதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்த படமானது 150 முதல் 180 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகப் போவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சிம்பு ஏற்கனவே தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியிருந்தார். இந்த படம் தள்ளிப்போக அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.