நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார்.
இவர் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஜூட் ஆண்டனி, தேசிங்கு பெரியசாமி ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளார் சிம்பு. இந்நிலையில் நடிகர் சிம்புவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நடந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா எனும் திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து எம் எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி , ராஜிவ் ரவீந்திரநாதன் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹோம்பாலை பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஃபேமிலி மென் என்ற வெப் தொடருக்கு கதை எழுதிய சுமன் குமார் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். யாமினி யாக்னமூர்த்தி படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ள நிலையில் ஷான் ரோல்டன் இதற்கு இசை அமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில் இந்த படமானது வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“I want to work with #SilambarasanTR. I like him very much. He has got a huge Fan base❣️. I talked with him 1-2 times over the phone call”
– KeerthySuresh pic.twitter.com/kB7ywbmmKK— AmuthaBharathi (@CinemaWithAB) July 30, 2024

எனவே படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சமயத்தில் கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அதில் கீர்த்தி சுரேஷிடம் சிம்பு குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கீர்த்தி சுரேஷ், ” சிம்பு மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ளார். அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். அவரை நேரில் சந்தித்ததில்லை. தொலைபேசியின் மூலம் ஓரீரு முறை பேசியிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


