spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகௌதம் கார்த்திக் மஞ்சிமா மோகன் திருமணம் செய்து கொண்டனர் Gautham Karthik Manjima Mohan got...

கௌதம் கார்த்திக் மஞ்சிமா மோகன் திருமணம் செய்து கொண்டனர் Gautham Karthik Manjima Mohan got Married

-

- Advertisement -

கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் மணிரத்னத்தின் “கடல்” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். நவரச நாயகனின் மகன் தான் கௌதம் கார்த்திக். ரங்கூன், இவன் தந்திரன், தேவராட்டம் போன்ற பல படங்களில் கௌதம் கார்த்திக்  நடித்தள்ளார். தற்போது பத்து தல என்னும் படத்தில் நடித்துள்ளார்.

நடிகை மஞ்சிமா மோகன் 2016 ஆம் ஆண்டு சிம்பு நடித்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வெளிவந்த “அச்சம் என்பது மடமையடா” என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமானவர். தேவராட்டம், எஃப்.ஐ.ஆர், துக்ளக் தர்பார் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

we-r-hiring

தேவராட்டம் படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகன் இணைந்து நடித்தனர். அப்போது ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.

இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக பயணிப்பதை கவனித்த திரையுலகத்தினர் இவர்கள் காதலிப்பதாக பேச தொடங்கினர். சமுக வலைத்தளங்களில் ரசிகர்கள் பேசியதையும் ஊடகங்கள் இவர்களை பற்றி செய்தி வெளியிட்டதையும்  இந்த ஜோடி மறுக்காததால் சந்தேகம் அதிகமானது.

அதனை தொடர்ந்து, கடந்த மார்ச் 11 ஆம் தேதி நடிகை மஞ்சுமா மோகனின் பிறந்தநாள் அன்று கௌதம் கார்த்திக் தனது பதிவில் “என்னுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு நிகழ்விற்காக நன்றியுடன் இருக்கிறேன் என்றால் உன்னைப்போல் ஒரு பெண் என் வாழ்க்கையில் இருப்பது மட்டுமே என கூறி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” மோமோ என செல்லமாக பதிவிட்டார். அத்தருனத்திலும் அவர்களுடைய காதலை வெளிபடுத்தவில்லை.

நடிகர் கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வளைத்தளங்களில் பகிர்ந்து அவர்களின் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

அதனை தொடர்ந்து திரைப்பிரமுகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவந்தனர்.

இருவீட்டார் சம்மதத்துடன் இன்று (நவம்பர் 28,2022) கௌதம் கார்த்திக் மஞ்சிமா மோகன் திருமணம் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் மிக எளிமையாக சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.

கௌதம் கார்த்திக் மஞ்சிமா மோகன் ஜோடிக்கு திரைத்துறையை சேர்ந்த ஐஸ்வரியா ரஜினிகாந்த், மணிரத்தினம், விக்ரம் பிரபு, கௌதம் மேனன், சிவகுமார் உள்ளிட்ட பலரும் திருமணத்தில் கலந்து கொண்டு இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

MUST READ