Homeசெய்திகள்சினிமாஆஸ்கர் மேடையில் அரங்கேறும் நாட்டு நாட்டு பாடல்

ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் நாட்டு நாட்டு பாடல்

-

- Advertisement -

ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் நாட்டு நாட்டு பாடல்

ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடையில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் நேரடியாக அரங்கேற உள்ளது.

நாட்டு நாட்டு பாடல் நிச்சயம் ஆஸ்கர் வெல்லும் என படக்குழு நம்பிக்கை

ராஜமௌலியின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வௌியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் சர்வதேச அளவில் கவனம் பெற்று பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது. மார்ச் 13-ம் தேதி நடைபெற உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிலும், அப்படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல், சிறந்த பாடலுக்கான போட்டியில் உள்ளது. இப்பாடல், நிச்சயம் ஆஸ்கர் விருது வெல்லும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், விழா மேடையில் பாடலை நேரடியாக அரங்கேற்றும் வாய்ப்பு பாடகர்களுக்கு கிடைத்துள்ளது. ராகுல் சிப்ளிகஞ்ச், கால பைரவா ஆகியோர் இணைந்து இப்பாடலை பாட உள்ளனர்.

அண்மையில், கலிபோர்னியாவில் நடைபெற்ற ஹாலிவுட் க்ரிடிக்ஸ் அசோசியேஷன் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் விருதுகளை குவித்தது. சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த ஆக்சன் திரைப்படம், சிறந்த சண்டை காட்சி ஆகிய விருதுகளுடன், நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த பாடலுக்கான விருதும் கிடைத்தது.

MUST READ