நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த பாடகர், பாடல் ஆசிரியர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். அதே சமயம் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் உருவெடுத்தார். அதைத்தொடர்ந்து 5 வருடங்கள் கழித்து தன்னுடைய 50வது படமான ராயன் திரைப்படத்தை
தானே இயக்கி நடித்துள்ளார் தனுஷ். இந்த படத்தை கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்திருந்தார். படத்தில் தனுஷ் தவிர எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், செல்வராகவன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.
#Raayan success celebration is happening now ❤️🔥#Dhanush😁❤️pic.twitter.com/Y2rYq6Ui4l
— AmuthaBharathi (@CinemaWithAB) August 10, 2024
அதே சமயம் இந்த படம் குறுகிய நாட்களிலேயே 100 கோடி வசூலை கடந்து சுமார் 140 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இனிவரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் தனுஷ் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.