spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாவினேஷ் போகத் நாட்டுக்காக செய்ததை மறந்துவிடக் கூடாது - நீரஜ் சோப்ரா வேண்டுகோள்!

வினேஷ் போகத் நாட்டுக்காக செய்ததை மறந்துவிடக் கூடாது – நீரஜ் சோப்ரா வேண்டுகோள்!

-

- Advertisement -

வினேஷ் போகத் நமது நாட்டுக்காக செய்ததை நாம் மறந்துவிடக் கூடாது என்று நீரஜ் சோப்ரா கேட்டுக்கொண்டுள்ளார்.

வினேஷ் போகத் தகுதி நீக்கம் விவகாரம் குறித்து பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஒலிம்பிக் போட்டியில் வினேஷ் போகத் பதக்கம் வென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும் என்றும், இப்படி ஒரு நிலை வராமல் இருந்திருந்தால் அவளுக்கு பதக்கம் கிடைத்திருக்கும் என்றும் கூறியுளளார்.

we-r-hiring

பதக்கம் வென்றவர்களை மக்கள் சில காலம் நினைவில் வைத்துக்கொண்டு, அவர்களை சாம்பியன்கள் என்று கூறுவார்கள் என தெரிவித்துள்ள நீரஜ் சோப்ரா, பதக்கம் வெல்லாதவர்களை மக்கள் எளிதில் மறந்துவிடுவார்கள், ஆனால் வினேஷ் நமது நாட்டுக்காக செய்ததை நாம் மறந்துவிடக்கூடாது என்று உங்களை கேட்டுக் கொள்வதாக நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்

MUST READ