spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுவங்கதேச போராட்டம்... ஷகிப்அல்ஹசன் மீது கொலை வழக்கு பதிவு

வங்கதேச போராட்டம்… ஷகிப்அல்ஹசன் மீது கொலை வழக்கு பதிவு

-

- Advertisement -

வங்கதேச கிரிக்கெட் நட்சத்திரம் ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் தொடர் போராட்டம் காரணமாக, பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசினா விலகி, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனை அடுத்து, அந்நாட்டில் நோபல் பரிசு பெற்ற முகமது யுனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. எனினும் வங்கதேசத்தில் இன்னும் முழுமையான அமைதி திரும்ப வில்லை.

we-r-hiring

இந்த நிலையில், வங்கதேச கலவரத்தின்போது ரபிகுல் இஸ்லாம் என்பவரது மகன் ஆகஸ்ட் 5-ம் தேதி போராட்டக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அடாபூர் காவல் நிலையத்தில் நடைபெற்று வரும் கொலை வழக்கில் சுமார் 150-க்கு மேற்பட்டோர் மேல் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

shakib

இதில் வங்கதேச கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், அவாமி லீக் கட்சியின் எம்.பியுமான ஷகிப் அல் ஹசன் பெயரும் சேர்க்கப்பட்டு உள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

MUST READ