இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டிற்கான ஹைப்ரிட் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன் இந்தியா, மார்ட்டின் குரூப் குழுமத்துடன் இணைத்து மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகையில்
‘மிஷன் ரூமி 2024’ திட்டத்தின் கீழ் RHUMI 1 என்ற ராக்கெட்டை உருவாக்கியுள்ளது.


இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ரீயூசபிள் ஹை ப்ரிட் ராக்கெட்டான RHUMI 1, 3 சோதனை செயற்கை கோள்களுடன் மாமல்லபுரம் அருகேயுளள திருவிடந்தை கடற்கரை பகுதியிலிருந்து ஹைட்ராலிக் மொபைல் லாஞ்ச்பேடில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

3.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் வானில், 80 கி.மீ. உயரே பறக்கக்கூடிய திறன் உடையது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டால், ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி, பல முறை செயற்கைக்கோளை ஏவலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
