சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கூலி. இந்த படத்தை கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். ரஜினி, லோகேஷ் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி படம் தொடர்பாக வெளியான அறிவிப்பு டீசரில் ரஜினிகாந்தின் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் ரஜினி இப்படத்தில் நெகட்டிவ் ஷேடட் ரோலில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் தயாராகி வரும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஐதராபாத் பகுதியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்தது. அதைத் தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரபல கன்னட நடிகர் உபேந்திரா ரஜினியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஏற்கனவே ரஜினியின் கூலி திரைப்படத்தில் நடிகர் உபேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று செய்திகள் கசிந்திருந்தன. அதன்படி தற்போது வெளியாகி உள்ள இந்த புகைப்படமும் உபேந்திரா படத்தில் இணைந்துள்ளதை உறுதி செய்துள்ளது. எனவே கூலி திரைப்பட நடிகர் உபேந்திராவின் கதாபாத்திரம் என்ன மாதிரியான கதாபாத்திரம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..
- Advertisement -