தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று எல்லை தாண்டி சாதனை படைத்து வருகிறார். அதேசமயம் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பவர் பாண்டி என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராகவும் உருவெடுத்தார். அடுத்ததாக தனது 50வது திரைப்படமான ராயன் திரைப்படத்தையும் இயக்கி பிரம்மாண்ட வெற்றி கண்டார். இந்நிலையில் மூன்றாவதாக தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரொமான்டிக் காதல் கதை களத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தை உண்டர்பார் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து GOLDEN SPARROW எனும் முதல் பாடல் வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகும் என பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.


