spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

-

- Advertisement -

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சீரானதால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடப்பு ஆண்டு சீசன் முடிவடைந்துவிட்ட போதும் மேற்குத்தொடர்ச்சி மலையில் திடீரென பெய்த கனமழை காரணமாக அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்ததால், பாதுகாப்பு கருதி ஐந்தருவி மற்றும் மெயின் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

we-r-hiring

kutralam

இந்த நிலையில் தற்போது குற்றாலத்தில் இயல்பான சீதோசன நிலை நிலவுவதாலும் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சீரானதாலும் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

MUST READ