spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகவலைப்படாதீர்கள்! பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுவோம்- விஜயகாந்த்

கவலைப்படாதீர்கள்! பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுவோம்- விஜயகாந்த்

-

- Advertisement -

கவலைப்படாதீர்கள்! பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுவோம்- விஜயகாந்த்

திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும், மிகப்பெரிய தொகையை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கி தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது அப்பட்டமாக தெரிகிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.

vijayakanth

இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் அனைவரும் எதிர்பார்த்த ஒன்று தான். மாபெரும் வெற்றி பெற்று விட்டதாக மார்தட்டிக் கொள்ளும், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும், மிகப்பெரிய தொகையை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கி தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

we-r-hiring

2009-ல் தி.மு.க உருவாக்கிய திருமங்கலம் பார்முலாவை 14 ஆண்டுகளுக்கு பின், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.கவே முறியடித்து விட்டது. பணபலம், அதிகாரபலம், ஆட்சி பலத்தை எதிர்த்து நமக்கு கிடைத்த ஒவ்வொரு வாக்குகளும் ஆயிரம் மடங்கு சமம். இது உண்மைக்கும், நேர்மைக்கும் கிடைத்த வாக்குகள். இடைத்தேர்தலில் இரவு பகல் என பாராமல் உழைத்த நமது நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகளை கண்டு நமது கழக நிர்வாகிகள் துவண்டு விடாதீர்கள், கவலைப்படாதீர்கள்.பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து இமாலய வெற்றி பெறுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 979 வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்தார் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ