spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் மட்டும் தான் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்-மா.சு

தமிழ்நாட்டில் மட்டும் தான் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்-மா.சு

-

- Advertisement -

தமிழ்நாட்டில் மட்டும் தான் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்-மா.சு

தமிழ்நாட்டில் மட்டும் தான் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

masu

சென்னை நந்தனம் ஆடவர் கலைக்கல்லூரி வளாகத்தில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் கலையரங்கம் அமைப்பதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “முதல்வரின் பிறந்தநாள் விழாவில் வட இந்திய அரசியல் தலைவர்கள் பங்கேற்றதால் சிலருக்கு பொறாமை. பொறாமையின் காரணமாக, வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல் என வதந்தி பரப்புகின்றனர்.

we-r-hiring

சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அனைவருக்குமான மாநிலம். இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தான் வட மாநில தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளனர். ஆனால் வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு எதிரான இடம் போல் வதந்தி பரப்புகின்றனர்.

தமிழ்நாட்டில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற வதந்தி, கட்டவிழ்த்து விடப்படுவதாகவும் இங்கு வெளிமாநிலத்தவர்களுக்கு பாதிப்பு என்ற மாயத் தோற்றத்தை சிலர் ஏற்படுத்தி வருகின்றனர். வட மாநில தலைவர்கள் பலரும் வருகை தந்து முதலமைச்சரை வாழ்த்தியதை பொறுக்காத சிலர், இத்தகைய அவதூறுகளை பரப்புகின்றனர்” என்றார்.

இதனிடையே வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள காவல்துறை, வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியாக வீடியோ போலியானது என விளக்கம் அளித்துள்ளது.

MUST READ