spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஆம்னி பேருந்துகள் கட்டணம் கிடுகிடு உயர்வு

ஆம்னி பேருந்துகள் கட்டணம் கிடுகிடு உயர்வு

-

- Advertisement -

தொடர் விடுமுறை எதிரொலியாக சென்னையில் இருந்து மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

நாளை சனிக்கிழமை வார இறுதி நாள், ஞாயிறு விடுமுறை மற்றும் மிலாடி நபி விடுமுறை என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வரவுள்ளது. இதையொட்டி, சென்னையில் பணிபுரியும் வெளியூர் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இந்த நிலையில், தொடர் விடுமுறையை ஒட்டி, சென்னையில்  ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

we-r-hiring

ஆம்னி பேருந்துகள் இனி புறவழிச்சாலை வழியே கிளாம்பாக்கம் செல்லும் என அறிவிப்பு..

அதன்படி, ஆம்னி பேருந்துகளில் சென்னையில் இருந்து மதுரை செல்ல ரூ.1,900 முதல் ரூ.4,000 வரையிலும், சென்னையில் இருந்து கோவை செல்ல ரூ.2,000 முதல் ரூ.4,500 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல், சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்வதற்கு ரூ.2,500 முதல் ரூ.4,500 வரையிலும், சென்னையிலிருந்து நெல்லை செல்வதற்கு ரூ.2,000 முதல் ரூ.4,200 வரையும் டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செ ய்யப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் வெளியூர் செல்லும் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

MUST READ