spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஈரானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா அணி ...

ஈரானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா அணி US foot ball team advanced to the next round after defeating Iran

-

- Advertisement -

கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் 22 ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு குரூப் பி பிரிவில் இரண்டு ஆட்டங்கள் ஒரே நேரத்தில் தொடங்கின. இதில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.

மற்றொரு ஆட்டத்தில் ஈரான்-அமெரிக்கா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோல் போடுவதற்கு இரு அணிகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டன. முதல் பாதியின் 38வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் புலிசிக் ஒரு கோல் அடித்து தமது அணியை முன்னிலை பெறச் செய்தார்.

we-r-hiring

ஈரான் வீரர்களின் 2வது பாதியில் ஆட்டத்தை சமன் செய்ய செய்த முயற்சி வெற்றி பெறவில்லை. இறுதிவரை வேறு கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அமெரிக்கா புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்ததுடன் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

MUST READ