spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'லப்பர் பந்து' படத்தில் நடிக்க மறுத்த எஸ்.ஜே. சூர்யா.... ஏன் தெரியுமா?

‘லப்பர் பந்து’ படத்தில் நடிக்க மறுத்த எஸ்.ஜே. சூர்யா…. ஏன் தெரியுமா?

-

- Advertisement -

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியிருந்த லப்பர் பந்து திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. 'லப்பர் பந்து' படத்தில் நடிக்க மறுத்த எஸ்.ஜே. சூர்யா.... ஏன் தெரியுமா?கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து அட்டகத்தி தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடித்திருந்த ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் ஆகிய இருவரின் நடிப்பும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று பல்வேறு தரப்பினரடையை பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்த படத்தினை தமிழரசன் பச்சமுத்து இயக்க பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தினை தயாரித்திருந்தது. அந்த வகையில் நாளுக்கு நாள் இந்த படத்தின் வசூலும் ரசிகர்களின் ஆதரவும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. விடுமுறை நாட்கள் என்பதால் இனிவரும் நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் எஸ் ஜே சூர்யா லப்பர் பந்து திரைப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அட்டகத்தி தினேஷ் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது எஸ்.ஜே. சூர்யா தானாம். 'லப்பர் பந்து' படத்தில் நடிக்க மறுத்த எஸ்.ஜே. சூர்யா.... ஏன் தெரியுமா?அதாவது 5.75 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தான் லப்பர் பந்து திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஆனால் எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் நடிக்க 7 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டாராம். அத்துடன் “நான் இப்பொழுதுதான் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறேன். எனவே இந்த படத்தில் வயதான தோற்றத்தில் ஹீரோயினுக்கு அப்பாவாக என்னால் நடிக்க முடியாது” என லப்பர் பந்து படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம் எஸ்.ஜே. சூர்யா. ஆனால் எஸ்.ஜே. சூர்யா நடிக்கு மறுத்த அட்டகத்தி தினேஷின் கதாபாத்திரம் தான் தற்போது பெரிய அளவில் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ