Homeசெய்திகள்இந்தியாதரையிறக்க முயன்றபோது வெள்ளத்தில் விழுந்த விமானப்படை ஹெலிகாப்டர்... நிவாரண பொருட்களை படகில் அள்ளிச்சென்ற மக்கள்

தரையிறக்க முயன்றபோது வெள்ளத்தில் விழுந்த விமானப்படை ஹெலிகாப்டர்… நிவாரண பொருட்களை படகில் அள்ளிச்சென்ற மக்கள்

-

- Advertisement -

பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டபோது வெள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்து கொண்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் முசாபர்பூர் மாவட்ட மக்களுக்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் உணவு பொருட்கள் வினியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

we-r-hiring

இந்த நிலையில், இன்று தர்பங்கா பகுதியில் உணவு விநியோகம் செய்து விட்டு ஹெலிகாப்டர் ஒன்று திரும்பிக கொண்டிருந்தது. முசாபர்பூர் மாவட்டம் அவுரா என்ற பகுதியில் சென்றபோது விமானி நீர்நிலைப்பகுதியில் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்க முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் வெள்ளத்தில் விழுந்தது.

நல்வாய்ப்பாக இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 4 விமானப்படையினர் காயம் இன்றி தப்பினர். அவர்களை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். மேலும் ஹெலிகாப்டரில் இருந்த நிவாரணப் பொருட்களை பொதுமக்கள் படகுகளில் எடுத்துச் சென்றனர்.

 

 

 

 

MUST READ