வேட்டையன் படத்தில் இருந்து முழு ஆல்பமும் வெளியாகி உள்ளது.
கடந்த அக்டோபர் 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வேட்டையன். இந்த படத்தினை டிஜே ஞானவேல் இயக்கி இருந்த நிலையில் லைக்கா நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. இந்த படம் அனிருத்தின் இசையிலும் கதிரின் ஒளிப்பதிவிலும் உருவாகி இருந்தது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்திருந்தார். பகத் பாசில், அமிதாப் பச்சன், ராணா டகுபதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று. அதன்படி நான்கு நாட்களில் கிட்டத்தட்ட 240 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மழைக்காலம் என்பதால் படத்தின் வசூல் குறைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த படம் விரைவில் 500 கோடியை நெருங்கிவிடும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் வேட்டையன் படத்தின் முழு ஆல்பமும் விரைவில் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்.
#Vettaiyan full album with 9 tracks is all yours now 🙏🏻🎯🏆 Thanks for all your love ❤️🫡❤️https://t.co/wU727ctU9m
— Anirudh Ravichander (@anirudhofficial) October 14, 2024

அதன்படி இன்று படத்தின் ஆல்பம் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மனசிலாயோ, ஹண்டர் வந்துட்டார் ஆகிய பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அத்துடன் மற்ற பாடல்களையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.