spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம் 59 சவரன் நகை  அபேஸ் ! - நடிகர் கருணாகரன் என்ன செய்தார் ?

 59 சவரன் நகை  அபேஸ் ! – நடிகர் கருணாகரன் என்ன செய்தார் ?

-

- Advertisement -

 59 சவரன் நகை  அபேஸ் ! - நடிகர் கருணாகரன் என்ன செய்தார் ?சென்னை காரப்பாக்கத்தில் வசிக்கும் நடிகர் கருணாகரன் வீட்டில் 59 சவரன் நகையை திருடியதற்காக அவரது வீட்டின் பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காரப்பாக்கத்தில்  நடிகர் கருணாகரன் (45) மற்றும் அவரது மனைவி தென்றல் ராஜேந்திரன் (44) வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் கடந்த மாதம் 2ம் தேதி முதல் 29ம் தேதி வரை 59.7 சவரன் தங்க நகைகள் சிறிது சிறிதாக மாயமாகியுள்ளது. அவரது வீட்டின் பணியாளர்களிடம் இதுகுறித்து விசாரித்த போது யாரிடமும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

we-r-hiring

பின்னர் தாம்பரம் மாநகர காவல் ஆணையரிடம் கருணாகரன் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் கண்ணகி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டு, வீட்டில் உள்ள அனைவரின் கை ரேகையும் பதிவு செய்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நடிகர் கருணாகரன் வீட்டில் காரப்பாக்கம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விஜயா என்ற விஜிலா மேரி (38) என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார்.போலீசார் நடத்திய கை ரேகை பதிவு சோதனையில் விஜிலா மேரியின் கை ரேகை ஒத்துப்போனது தெரியவந்துள்ளது.

 59 சவரன் நகை  அபேஸ் ! - நடிகர் கருணாகரன் என்ன செய்தார் ?

இதனையடுத்து போலீஸார் தீவிரமாக விஜிலா மேரியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கருணாகரன் வீட்டில் சீறுக சிறுக நகைகளை திருடியதை அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். அதனையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து , அவரிடமிருந்து திருடப்பட்ட 59.7 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

MUST READ